ஒரு பொருளை விளம்பரம் செய்ய, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் விதவிதமான யுக்திகளை கையாள்வது வாடிக்கைதான்.. சில விளம்பரங்கள் டீசன்டான முறையில் எடுக்கப்பட்டு நாகரிகமான முறையில் வாடிக்கையாளர்களை கவரும்.. இன்னும் சில விளம்பரங்கள் அர்த்தமில்லாத வகையில் முட்டாள்தனமாக எடுக்கப்பட்டு வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்யும்..
இந்த பைக் ஓட்டினால், இந்த ஜட்டி அணிந்தால், இந்த பெர்ப்யூம் உபயோகித்தால் பெண்கள் எல்லாம் உங்கள் பின்னாலேயே ஓடிவந்துவிடுவார்கள் என்கிற மகாமட்டமான கற்பனை எல்லையை தாண்டி பெரும்பாலான விளம்பரப்பட இயக்குனர்களின் கற்பனைத்திறன் போனது இல்லை.
சரி அவர்களிடம் சரக்கு இருந்தால் தானே புதிதாக வரும்.. ஆனால் அதேசமயம் புதிதாக யோசிக்கிறேன் என சில அறிவுஜீவிகள், விளம்பரம் எடுத்து தாங்களும் சிக்கலில் மாட்டிக்கொண்டு தனகளது விளம்பரத்தில் நடித்தவர்களையும் சிக்கலில் மாட்டிவிட்டு விடுவார்கள்.
சமீபத்தில் அந்தமாதிரி பிரகாஷ்ராஜ் நடித்த ஒரு நகைக்கடை விளம்பரம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் தனது திருமணமாகாத மகளை அறிமுகப்படுத்தும்போது “இதுதான் என் முதல் டென்சன்” என அறிமுகப்படுத்துவார்.
அதாவது திருமணம் ஆகாமல் வீட்டில் இருக்கும் பெண்களை டென்சன் தருபவர்கள் என்கிற ரீதியில் தரக்குறைவாக சித்தரித்துள்ள அந்த விளம்பரத்துக்கும் விளம்பரத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குனராகவும் மாறி சிந்திக்க கூடிய பிரகாஷ்ராஜ், பணத்துக்காக இப்படி யாரோ எழுதிக்கொடுத்ததை அப்படியே நடித்துவிட்டு போகலாமா.. அவருக்கு இது சரியா தப்பா என பிரித்து பார்க்கும் சென்ஸ் கூட இல்லையா என்கிறார்கள் விமர்சகர்கள். ஆனால் இந்த விளம்பரத்தை தடைசெய்யச்சொல்லி போடப்பட்ட வழக்கையே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.