இளையராஜா-1000 நிகழ்ச்சியில் பிரதாப் போத்தன் பாதியிலேயே கிளம்பியது ஏன்..?


சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘இளையராஜா-1000’ நிகழ்ச்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைத்து நடத்தியது விஜய் டிவி.. விழாவை நடத்தியதில் கிட்டத்தட்ட 1000 சொதப்பல்கள்.. கேட்டால் ஆளாளுக்கு ஒன்றை சொல்வார்கள். நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனுக்கும் அப்படி ஒரு அனுபவம் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்டது.

பிரதாப் போத்தன் நடித்த ‘மூடுபனி’, நெஞ்சத்தை கிள்ளாதே’ படங்கள் ஆனாலும் சரி, அவர் இயக்கிய வெற்றிவிழா, மைடியர் மார்த்தாண்டன் படங்கள் ஆனாலும் சரி.. அவரது படங்கள் இளையராஜாவினால் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிற்பவை.. அதனால் அவருக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

விழாவுக்கு வந்த அவரும் தன்னை மேடைக்கு அழைப்பார்கள் என ஒவ்வொருமுறையும் காத்து காத்து நொந்து போனார். ஒருகட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் வந்து, உங்களையும், நடிகர் ஜெயராமையும் மலையாள திரையுலக வரிசையில் இருந்து அழைக்க இருக்கிறோம்.. காத்திருங்கள் எங்கேயும் போய்விடவேண்டாம் என சொல்லிவிட்டு சென்றாராம்.

இதை கேட்டதுதான் தாமதம்.. கிட்டத்தட்ட இரவு 11 மணி வரை காத்திருந்த அவர், ஜெயராம் என்கிற பெயரை கேட்டதும் உடனே விழா மைதானத்தை விட்டு அப்படியே எஸ்கேப் ஆகிவிட்டார்.. காரணம் சில மாதங்களுக்கு முன்பு தான் ஜெயராம் மீதான குற்றச்சாட்டுகளை மீடியா மற்றும் சோஷியல் மீடியா இரண்டிலும் கழுவி கழுவி ஊற்றினார் பிரதாப் போத்தன்..

அது அவர்களுக்குள் உள்ள பெர்சனல் பகை.. இப்போது ஒன்றாக மேடையேற சொல்லிவிட்டால் சங்கடம் என்பதால் தான் சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம் பிரதாப் போத்தன்.