ஒற்றுமையாக இருப்பவர்களை நீண்டநாளைக்கு அப்படி இருக்கவிடாது இந்த உலகம்.. ஏதோ ஒருவிதத்தில் கலகத்தை உண்டுபண்ணி, அவர்களுக்குள் குழப்பத்தை உண்டுபண்ணி, குழாயடி சண்டை ரேஞ்சுக்கு கொண்டுவந்து விடுவார்கள் சில கலகதாரிகள்.. சமீபத்தில் நடந்த பொதுக்குழு வரை சுமூகமாக சென்றுகொண்டிருந்த பாண்டவர் அணியில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
இந்த குழப்பம் ஏற்ப காரணம் விஜய் கார்த்திக் என்கிற அதிமுக சார்பு சில்வண்டு நடிகர் தான் என்றாலும் இதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி ஜே.கேரித்தீஷ் தான் என்று சொல்லபடுகிறது.. சமீபத்தில் நடந்த பொதுக்குழுவின்போது ஜே.கே.ரித்தீஷை மேடைக்கு அழைக்காமல் விட்டுவிட்டார்கள் என்கிற ஈகோவால், பிரச்சனை உருவாகி, பாண்டவர் அணியில் உள்ள பொன்வண்ணன் இதன் காரணமாக ராஜினமா கொடுத்தார் என்றும் கூட சொல்லப்பட்டது.
ஆனால் பொன்வண்ணனும், நடிகர் சங்க தலைவர் நாசரும் இந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் தாங்கள் எந்தவித குழப்பமும் இன்றி பணிகளை கவனித்து வருவதாகவும் பதிலளித்துள்ளனர். எப்படியோ பிரிவினைவாதிகளை அடையாளம் கண்டு, சாதுர்யமாக தப்பித்தால் சரி தான்.