தயாரிப்பாளரை ஏமாற்றியதா வெளியீட்டு நிறுவனம்?

தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை ஒரு நிறுவனம் தயாரிச்சாங்க. அதை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய மற்றொரு நிறுவனத்திடம் 18 கோடிக்கு வித்தாங்க.

அதை வாங்கிய நிறுவனமோ 15 கோடியை மட்டும் கொடுத்து விட்டு, படத்திற்கான விளம்பர செலவுகளை நாங்களே பார்த்து கொள்கிறோம் என 3 கோடியை வைத்து கொண்டதாம்.

உண்மையில் அந்த நிறுவனம் 50 லட்ச ரூபாய் கூட செலவு செய்ய வில்லையாம். இதை தெரிந்த ஒரிஜினல் தயாரிப்பு, வாங்கிய நிறுவனத்திடம் கோப முகம் காட்ட.. இருவருக்கும் முட்டிக்கொண்டதாம்.

பின்னர் களத்தில் இறங்கிய தயாரிப்பு நிறுவனம், வாங்கிய நிறுவனத்தின் பெயரை கெடுக்கவும், இனியாவது செலவு செய்ய மாட்டார்களா? எனவும் அவர்களை பற்றிய பொய் செய்திகளை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லி இணையத்திலிலும் வாட்ஸாப்பிலும் உலவவிட்டார்களாம்.

இது ஒரு புறம் இருக்க.. படம் வேறு சுமாராக போய்க்கொண்டு இருப்பதால் உண்மையான முட்டல் மோதல்கள் இனி தான் என கிசு கிசுக்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

—————————–

குறிப்பு: இது கிசு கிசு என்பதால் பதிவுக்கும் போட்டோவிற்கும் தொடர்பு இல்லாதது போல் ஒரு போட்டோவை போட்டு இருப்பதாக நம்புகிறேன்.