‘தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று’ என்ற குரல் மொழி நம்மில் பலருக்கு பால பாடம் ஆக இருந்து இருக்கிறது. செல்வம் மற்றும் அனைத்தும் நமக்கு புகழ் கிட்டும் போது வரும் இலவச இணைப்புகளாகும். ‘புகழ்’ கிட்டும் போது அனைத்தும் நம்மை அடையும்.அத்தகைய ‘புகழ்’ படத்தின் தலைப்பாக வரும் போது ‘புகழ்’ தருணங்களை ஏற்படுத்திக் கொள்வதே சாமர்த்தியம்.
‘ஜெய் மற்றும் அவருக்கு இணையாக சுரபி நடிக்கும் ‘புகழ்’ எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாகும்.இந்த படம் தலைப்பை போலவே ‘புகழ்’ பெற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.தலைப்பை உச்சரிக்கும் போதே எங்களுக்குள் தொற்றிக் கொள்ளும் உற்சாகம் சொல்லி மாளாது.
வடகறி படத்தில் அறிமுகமான இளம் இசை அமைப்பாளர்கள் விவேக் சிவா – மெர்வின் இரட்டையர்கள் இந்த படத்தின் இசை மூலம் இன்னமும் சிகரத்தை அடைவார்கள் என்பதில் பெரும் நம்பிக்கை. 2014 ஆண்டில் ‘நெஞ்சுக்குள்ளே நீ’ பாடல் மூலம் இசை உலகில் பெரும் பாராட்டு பெற்ற இவர்கள் 2015 ஆம் ஆண்டில் இந்திய இசை உலகின் இரு ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் தங்களது இசை பயணத்தை துவங்கி உள்ளனர்.
2014 ஆம் ஆண்டில் பல சாதனைகளை புரிந்த இளம் இசை அமைப்பாளர் அனிரூத் ‘புகழ்’ திரை படத்தின் முதல் பாடலை பாடி உள்ளார்.’ நாங்கதான்டா போடியன்தாண்டா ஆட்டம் தண்டா ஊருக்குள்ள கிங்குதாண்டா ‘ என்றுத் துவங்கும் இந்த பாடலை இயற்றியவர் அண்ணாமலை.
பெரும் வெற்றி பெற்ற ஹிந்தி திரைப்படமான ‘அஷிக்லி’ திரைபடத்தில் இடம் பெற்று நாடெங்கும் பட்டி தொட்டிகளிலும் புகழ் பெற்ற ‘தும் ஹி ஹோ ‘ பாடலை பாடிய அரிஜித் சிங் ‘புகழ்’ படத்தில் வரும் ஒரு மெலடி மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.
‘நீயே வாழ்கை என்பேன் ,இனி வாழும் நாட்கள் என்பேன் ‘ என்று துவங்கும் இப்பாடலை இயற்றியவர்கள் நா.முத்துகுமார் மற்றும் பிரான்சிஸ் .அவரை தமிழுக்கு அறிமுகம் செய்வதில் எங்களுக்கு பெருமை.மேற்கூறிய இரண்டு பாடல்களும் ‘புகழ்’ மேலும் புகழ் பெற வழி வகுக்கும். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, மூன்றாவது மற்றும் இறுதிகட்ட கட்ட படபிடிப்புக்கு தயார் நிலையில் உள்ளோம். திட்டமிட்டு குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடத்தி முடித்த எங்களது இயக்குனர் மணிமாறன் மற்றும் அவரதுக் குழுவினருக்கும் இந்த படம் பெரும் ‘புகழ்’ சேர்க்கும், என்றனர் தயாரிப்பாளர்கள் சுஷாந்த் பிரசாத் மற்றும் கோவிந்தராஜ்.
ஏராளமான பொருட்செலவில் வித்தியாசமான கதை அமைப்பில் தயாராகும் இந்த படத்தை வழுங்குபுவர் ரெடியன்ஸ் மீடியா வருண் மணியன்.