பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் ஆடியோ ரிலீசின்போது அவர்களது ரசிகர்கள் கூட எப்படியோ உள்ளே வந்துவிடுகிறார்கள். ஆனால் படத்தில் நடித்த ஹீரோயின்களைத்தான் அங்கேயிங்கே என அலையவிட்டு கடுப்பேற்றும் நிகழ்வுகள் தொடர்கதையாகிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக விஜய் பட விழாக்களில் தான் இதுபோன்ற கொடுமைகள் நிகழ்கின்றன.
கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நாயகி சமந்தாவும் கூட இதில் விதிவிலக்கல்ல.. அந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள பிரமாண்ட ஹோட்டல் ஒன்றில் நடந்தபோது, செக்யூரிட்டி பலமாக இருந்ததால், உள்ளே செல்ல பாஸ் இல்லாமல் வந்த சமந்தாவை பத்து நிமிடத்துக்கு மேலாக காக்க வைத்தனர்
பின்னர் பட யூனிட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். சமந்தா ஒரு பிரபல ஹீரோயின், அதிலும் அந்தப்பட நாயகி என்று தெரிந்தும்கூட உள்ளே நுழைய விடாமல் வாசலில் அந்த அளவுக்கு கெடுபிடி செய்தனர். (இத்தனைக்கும் அவர் மேக்கப்பில் தான் இருந்தார். அதனால் அடையாளம் தெரியவில்லை என்று கூட சொல்ல முடியாது). ஆனாலும் இந்த சம்பவம் சமந்தாவை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.
அதனால் சமீபத்தில் மாமல்லபுரத்தில் உள்ள மிகப்பெரிய ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற விஜய்யின் புலி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொள்ளும் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்பட யாருக்கும் எந்தவித டென்சனையும் கொடுக்கக்கூடாது என்பதற்காக, விஐபிக்களை உள்ளே அழைத்து வருவதற்கு ஒரு தனி டீமை ரெடி பண்ணியிருந்தார்கள்.
ஆனாலும் வழக்கம்போல் விழா தொடங்கிய பிறகே என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.. விழா நடந்து கொண்டிருந்ததால் மொத்த கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, அவரது உதவியாளர்கள் ஒவ்வொரு கதவாக தட்டியபோது, விஐபி ஏரியா வேறு பகுதியில் உள்ளது என்று நடிகையை சுற்ற விட்டார்களாம்.
இதனால் கடுப்பான நடிகை, ஆங்கிலத்திலும், இந்தியிலும் திட்டித்தீர்த்துககொண்டே ஒருவழியாக உள்ளே சென்றாராம். இத்தனை ஏற்பாடுகள் செய்தவர்கள் ஸ்ருதிஹாசன் இன்னும் வரவில்லையே, அவரை வரவேற்க வாசலில் நிற்கவேண்டுமே என்கிற எண்ணம் கூட இல்லாமல் இருந்திருக்கிறார்கள். ஆக கடந்த வருடம் ‘கத்தி’ பட ஆடியோ விழா சமந்தாவை கிழித்தது.. ‘புலி’ பட ஆடியோ விழா ஸ்ருதியை பிராண்டிவிட்டது.