ராதாரவி என்கிற சீனியர் நடிகர் இன்றைய ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறியது யூடியூப்பின் தாக்கத்தால் தான். அவரே அதை ஒப்புக்கொள்ளவும் செய்கிறார். அவர் பேசும்போது நக்கலும் நையாண்டியுமாக யாரை வேண்டுமானாலும் விமர்சித்து பேசுவதால் அவரது வீடியோக்களை பார்ப்பதற்கென்றே குறிப்பிட்ட பார்வையாளர்கள் இருக்கிறார்கள்.
அதனால் அவர், தான் பேசும் ஒவ்வொரு மேடையிலும் யூடியூப்காரர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, சர்ச்சையாக பேச ஆரம்பித்து விடுகிறார். அந்தவகையில் சமீபத்தில் புதுமுக சினிமா நடிகர் சங்கம் என ஒரு ஆரம்பிக்கப்பட்டுள்ள சங்கத்தின் துவக்க விழாவில் பேசிய ராதாரவி பேச்சுவாக்கில், விஷாலின் பற்றி, குறிப்பாக விஷாலின் திருமணம் பற்றி பேசிய ஆபாசத்தின் உச்சம்..
அதாவது, “நடிகர் சங்க கட்டடம் கட்டிட்டு தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒருத்தர் சொல்றாரு.. நீ கல்யாணம் பண்ணு பண்ணாம போ.. நீ கல்யாணம் பண்ணுனா உன் ஒருத்தனுக்குத்தான் வேலை.. பத்து பேருக்கா வேலை கொடுக்கப்போற” என தரம் தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகித்துள்ளார் ராதாரவி..