“மெர்சல் படத்தில் பாஜக, மத்திய அரசு ஆகியவற்றுக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக கேள்விப்பட்டோம்.. அதனை உடனடியாக நீக்கவேண்டும்” என கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் தமிழிசை ஒரு தீப்பொறியை பற்றவைத்தார். அதை தொடர்ந்து விஜய்க்கு கிறித்துவர் என்கிற மதச்சாயம் பூசி, அந்த நெருப்பை பெரிதாக்கினார் பா.ஜ.கவின் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா. இந்த இரண்டு பேருமே தியேட்டரில் போய் படம் பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்.
இந்தநிலையில் இவர்கள் இப்படி நடந்துகொள்வதற்கு தனது பாணியில் ஒரு ‘அடடே’ என சொல்லும்படியாக காரணம் கூறியுள்ளார் ராதாராவி. அதாவது மெர்சல் படம் பார்க்க இவர்களுக்கு விருப்பம் தான் என்றும் ஆனால் தியேட்டரில் போய் காசுகொடுத்து பார்க்க விருப்பமில்லை என்றும், இப்படி போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பினால், தங்களை அழைத்து ஸ்பெஷல் ஷோவே போட்டுக்காட்டுவார்கள் என்பதால் தான் இப்படி ஸ்டண்ட் அடிக்கிறார்கள் என்றும் நையாண்டியாக கூறியுள்ளார் ராதாரவி.
அதேசமயம் தான் இணையதளத்தில் மெர்சல் படத்தை பார்த்ததாக ஹெச்.ராஜா கூறியதை வன்மையாக கண்டித்தும் உள்ளார் ராதாரவி.