சரத்குமார் அணியுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு இனி இடமே இல்லை என சொல்லிவிட்டு நடிகர்சங்க தேர்தலுக்காக பாண்டவர் அணியுடன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஷால். இந்த நேரத்தில் தான் தேர்தலில் பொதுச்செயலாளராக நிற்பதே ராதாரவி எதிரணியில் அந்த பதவிக்கு நிற்கிறார் என்பதால் தான் என கூறிய விஷால், திருச்சியில் கலந்துகொண்ட கூட்டத்தில் ராதாரவியின் செயல்பாடுகளை போட்டு தாக்கினார்.
“ராதாரவி தேனாம்பேட்டையில ஒரு நடிகர்சங்க உறுப்பினரோட சாவு நிகழ்ச்சில கலந்துக்கிட்டாரு.. அயனாவரத்துல ஒருத்தரோட சாவு வீட்ட்ல வந்து நின்னாரு அப்படின்னு சொல்றாங்க.. சாவு வீட்ல எல்லாம் யார் போய் நிப்பா.. வெட்டியான் தான் நிப்பான்… இதுநாள் வரைக்கும் வெட்டியான் வேலைதான் பார்த்திருக்கார் ராதாரவி.. நாங்க உயிரோட இருக்குறவங்களுக்கு உதவுற வேலையத்தான் பார்க்கப்போறோம்” என ஆவேசமாக கூறிய விஷால், தயவு செய்து வெட்டியானை தவறாக பேசுகிறேன் என நினைத்துவிடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.