பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள குறும்படத்தில் இருந்து ராதிகா ஆப்தே நடித்த ஆபாச காட்சி கொஞ்சூண்டு கசிந்துள்ளது. இதுபற்றிய செய்தியை உங்களுக்கு நீட்டி முழக்கி சொல்ல தேவையில்லை.. அதனால் நேராக விஷயத்திற்கு வருவோம்..
இந்த குறும்பட காட்சி கசிந்துள்ளதை பார்த்து இயக்குனர் அனுராக் கஷ்யப் கோபமும், அதிர்ச்சியும் அடைந்தாராம். உடனே இது குறித்து அவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தாராம். அவரது புகாரின்பேரில் வீடியோவை கசியவிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.. திடீர் திடீர்னு உருளுதாம்.. சாயுதாம்…
இது என்னய்யா கொடுமையா இருக்கு..? ஆபாச வீடியோவை திருட்டுத்தனமாக கசியவிட்டவர் மேல் வழக்கு தொடர்வார்களாம், பார்க்கவே முகம் சுழிக்க வைக்கும் அந்த ஆபாச வீடியோவை எடுத்தவர் ஜென்டில்மேனாகி விடுவாராம். அதில் நடித்த நடிகை புண்ணியவதி ஆகிவிடுவாராம்..
அது மட்டுமல்ல சர்வதேச சந்தையில் மட்டும் வெளியிட இருக்கும் இக்குறும்படத்தின் நிர்வாணக் காட்சியை பெண் கலைஞர்களே படமாக்கினார்களாம். இதுபோக மற்ற வேலைகளுக்கு கூட இந்த வீடியோவை பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவிலேயே உபயோகித்து வந்தார்களாம்.
நிர்வாண காட்சியை பெண்களே படமாக்கியிருந்தாலும் அதை பார்க்கப்போவது பெரும்பாலும் ஆண்கள் தானே..! அம்மா ராதிகா ஆப்தே.. இப்படி நாலாந்தரமாக நடித்து, அதை சர்வதேச சந்தையில் பிலிம் காட்டி அப்படி என்னம்மா சாதிக்கப்போறே என்றுதான் கேட்க தோன்றுகிறது.