கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனியர் நடிகை ஜெயபிரதா தனது மகன் சித்து, தமிழில் ‘சத்யம்’ பட இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் அறிமுகமாகும் ‘உயிரே உயிரே’ படத்தின் இசைவெளியீட்டு விழாவை சத்யம் தியேட்டரில் வைத்து நடத்தினார். இந்த விழாவிற்கு தனது பழைய தோழிகள் என்கிற முறையில் சீனியர் நடிகைகளான ராதிகா, ஸ்ரீப்ரியா, சுமலதா ஆகியோரை அழைத்திருந்தார்.
விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஜெயபிரதா பற்றி புகழ்ந்தும், அவரது மகனை வாழ்த்தியும் பேசினார்கள். தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பாளர் ஒருவர், இந்த சீனியர் நடிகைகளை கிண்டலடித்து கலாய்க்க, விழா ஜாலியாகத்தான் போனது. ஆனால் அதன்பின் ராதிகா மைக்கை பிடித்து பேசியது தான் வந்திருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துவிட்டது.
படத்தின் ஹீரோவை வாழ்த்திய ராதிகா, டக்கென ரூட்டை மாற்றி “இன்றைய இளைஞர்களிடம் ஒற்றுமையில்லை.. உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.. வானத்தை பார்த்து எச்சில் துப்பினால் உங்கள் மீதுதான் விழும்” என தனது கணவருக்கு வக்காலத்து வாங்கும் விதமாக, சமகாலத்தில் புகைந்துகொண்டிருக்கும் நடிகர்சங்க பிரச்சனையை மறைமுகமாக பேச ஆரம்பித்துவிட்டார். இது குறிப்பாக விஷால், கார்த்தி போன்ற சரத்குமாருக்கு எதிரான இளம் நடிகர்களைத்தான் என்பது அனைவருக்கும் தெரியாதா என்ன..?
ஆனால் அடுத்து பேசவந்த தெலுங்கு சீனியர் நடிகரான மோகன்பாபு பேசும்போது பேச்சுவாக்கில், “ராதிகா.. இன்றைய இளம் நடிகர்களை பற்றி நாம் குறைசொல்ல கூடாது. காரணம் இன்றைக்கு இருப்பது புது ஜெனரேஷன்.. நாமெல்லாம் இருபது வருடத்திற்கு முந்தியவர்கள்.. நம்மிடம் இருப்பது போன்ற விஷயங்களை அவர்களிடம் எதிர்பார்க்க கூடாது” என ராதிகாவுக்கு நோஸ்கட் கொடுத்தார் பாருங்கள்.. ராதிகா முகம்போன போக்கை பார்க்கவேண்டுமே..
இதில் என்ன பியூட்டி என்றால் தான் சாதாரணமாக சொன்ன விஷயம் இன்றைய நடிகர்சங்க அரசியலுக்கும், ராதிகா பேசியதற்குமான பதிலடியாகவும் பொருத்தமாக இருந்தது, பாவம் மோகன்பாபுவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.