நடைபெற்ற நடிகர்சங்க தேர்தலின்போது, நடிகர்சங்கத்தில் எந்தப்பதவியிலும் இல்லாமலேயே எந்தப்பதவிக்கும் போட்டியிடாமலேயே, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சரத்குமாரின் மனைவி என்கிற ஹோதாவில் தங்களை எதிர்ப்பவர்களை வாய்க்கு வந்தபடி பேசினார் ராதிகா.. வாய்ப்பு கிடைக்காதபோது வான்டேடாக பிரஸ்மீட் வைத்தெல்லாம் திட்டித்தீர்த்தார்.
அவர் பேசிய பேச்சுக்கள் தான் நடுநிலை வாக்களர்களை முகம் சுழிக்க வைத்ததோடு, விஷால் அணியின் பக்கமும் திருப்பிவிட்டது.. இப்போது தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் ராதாரவியும் சரத்குமாரும் தோல்வியை தலைவணங்கி ஏற்பதாக ரொம்பவே டீசண்டாக கருத்துக்களை கூறினார்கள்.
நேற்று சரத்குமார் எஸ்.பி.ஐ சினிமாஸுடனான ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பே ரத்து செய்துவிட்டேன் என கூறினார்.. இது கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “வெட்கி தலைகுனியுங்கள் நண்பர்களே.. சரத்குமாரின் மனைவி என்பதற்காக பெருமைப்படுகிறேன்” என கருத்து சொல்லியிருந்தார்..
அதாவது, “பார்த்தீர்களா.. என் கணவர் எவ்வளவு உத்தமர் என்று.. அவரைப்போய் தவறாக நினைத்துவிட்டீர்களே” என எதிரணியினரை பார்த்து சொல்லும்விதமாக ‘வெட்கி தலைகுனியுங்கள்” என அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.. ஆனால் தான் இதுவரை பேசிய பேச்சுக்களுக்காக ராதிகா வெட்கி தலைகுனிவதற்கான அறிகுறிகளைத்தான் காணோம்..