உதவி இயக்குனருக்கு சரக்கு வாங்கி கொடுத்து எஸ்.ஏ.சியை திட்டவைத்த ராதிகா..!


இசை வெளியீட்டு விழாக்களுக்கு வந்தோமோ, ஆடியோவை வெளியிட்டோமா, படக்குழிவினரை பற்றி நல்லதாக நான்கு வார்த்தைகள் புகழ்ந்து பேசி வாழ்த்துச்சொல்லி கிளம்பினோமா என பெரும்பாலான வி.ஐ.பிகளுக்கு நடந்துகொள்ள தெரிவதில்லை. எதையாவது பேசுகிறோம் என தனக்கும், அதில் சம்பந்தப்பட்ட இன்னொரு வி.ஐ.பிக்கும் வாண்டேட்டாக கேவலத்தை இழுத்து விட்டுக்கொள்ளும் அவலத்தை பல இசை விழாக்களில் பார்க்கமுடிகிறது.

சமீபத்திய உதாரணம் நையப்புடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.. எஸ்.ஏ.சந்திரசேகர் கதாநாயகனாக நடித்து, கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு சிறப்பு விருந்தினராக ராதிகாவை அழைத்திருந்தார்கள்.. எஸ்.ஏ.சி தைராக்சனில் ராதிகா நிறைய படங்களில் நடித்தவர் என்பதால் அவரும் சந்தோஷத்துடன் தான் வந்திருந்தார்..

விழாவில் தனது பழைய படம் ஒன்றின் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகளை குறிப்பிட்டு பேசிய எஸ்.ஏ.சி, அந்தபடத்தின் உதவி இயக்குனர்கலீல் ஒருவர் ஒரு குடிகாரர் என்றும், இதை தெரிந்துகொண்ட ராதிகா ஒருநாள் அவருக்கு சரக்கு வாங்கிக்கொடுத்து எஸ்.ஏ.சியை பற்றி கேட்க, மப்பில் இருந்த அந்த உதவியாளரோ எஸ்.ஏ.சியை ‘செந்தமிழ்’ வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்துவிட்டாராம்.

இதில் என்ன கொடுமை என்றால் தான் இப்படி பண்ணப்போவதாக முன்கூட்டியே எஸ்.ஏ.சியிடம் ராதிகா சொல்லிவிட்டதால் அவரும் ஒரு கேமராவை வைத்து, அந்த உதவியாளர் பேசியதை எல்லாம் வீடியோவாக்கி, மறுநாள் அவருக்கே போட்டுக்காட்டி அவரை மிரள வைத்தார்களாம்.. அந்த அளவுக்கு ராதிகா குறும்புக்காரர் என்று பேசினார் எஸ்.ஏ.சி.. ஆகா ஒருவரை புகழ்ந்து பேசுகிறேன் என்கிற நினைப்பில் தேரை இழுத்து தெருவில் விட்டது போல தன்னையும் ராதிகாவையும் வாண்டேட் ஆக கேவலப்படுத்திக்கொண்டு விட்டார் எஸ்.ஏ.சி