இயக்குனர் அமீரை பொறுத்தவரை ‘பருத்திவீரன்’ வெற்றியை வைத்து மட்டுமே கிட்டத்தட்ட பத்து வருடங்களை ஓட்டிவிட்டார்.. அதற்குப்பிறகு ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தை இயக்குகிறேன் என சில வருடங்கள் இழு இழு என இழுத்தடித்து வெளியிட்டார். படம் பிளாப் ஆனதுதான் மிச்சம்.. அதனால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும் வரை, பொதுமேடைகள் கிடைத்தால் ஏதாவது சர்ச்சையாக பேசி ரசிகர்களின் கவனத்தில் தன்னை கொஞ்சநாள் தக்கவைத்துக்கொள்வது இவரது வழக்கம்..
அந்த விதமாகத்தான் சமீபத்தில் பிரதமர் மோடியின் ‘கருப்பு பண ஒழிப்பு’ திட்டத்திற்கு எதிராக ஒரு சினிமா விழாவில் பேசிய அமீர், திடீரென சம்பந்தமே இல்லாமல் ரஜினி ‘கபாலி’ படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார்.. அதை வெளியிட தயாரா என பேசி சர்ச்சையை கிளப்பினார். இதே அமீர் தான் ‘லிங்கா’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வரவேண்டும் என பலமாக ஜால்ரா தட்டியவர்..
தற்போது ரஜினி குறித்த சர்ச்சை பேச்சால் தொடர்ந்து ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு வருகிறார் அமீர்.. ரஜினி ‘கபாலி’க்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது இருக்கட்டும்.. அந்தப்படம் அத்தனை கோடி, இத்தனை கோடி வசூலித்ததாக சொன்னார்களே, அது எவ்வளவு என தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை வெளியிட சொல்லி அமீர் கேட்டிருக்கலாமே.. அதை ஏனய்யா கேட்கவில்லை என அமீருக்கு சூடாக பதில் தந்து வருகிறர்கள்..
இன்னும் சில ரசிகர்கள்,, ஆதி பகவன் படத்துக்கு நீங்க எவ்வளவு சம்பளம் வாங்கினீர்கள், அந்தப்படம் எவ்வளவு ரூபாயில் தயாரானது.. படத்தின் நட்டம் எவ்வளவு..? தயாரிப்பாளர் இப்போது எங்கே பிச்சை எடுக்கிறார்..? உங்களுக்கும் சூர்யா குடும்பத்துக்கும் என்ன பிரச்சனை? இதையெல்லாம் ஓப்பனாக வெளியில் சொல்வீர்களா அமீர் என கேள்விமேல் கேட்டு சோஷியல் மீடியா மூலமாக அமீரை விமர்சித்து வருகிறார்கள்.
ஏண்டா தேவையில்லாமல் வாயை விட்டோம் என புலம்பி வருகிறாராம் அமீர்..