சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் வரும் ஏப்-27ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.. ஆனால் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை குறைக்கவேண்டும் என வலியுறுத்தி கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிட மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருகிறது.
இதை தொடர்ந்து வரும் மார்ச்-16 முதல் படப்பிடிப்புகள், போஸ்ட் புரடக்சன் வேலைகள், திரைப்பட விழாக்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தியேட்டர் உரிமையாளர்களும் வரும் 16ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.
இந்த வேலைநிறுத்தம் இப்படியே நீட்டித்துக்கொண்டு போனால் ‘காலா’ ரிலீஸுக்கும் சிக்கல் ஏற்படும் என்றும், அதன் ரிலஸ் தேதி தள்ளிப்போகும் என்றும் கூட சொல்லப்படுகிறது. ஆனால் அவ்வளவு நாட்கள் இந்த வேலைநிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் விரைவில் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வரும் என்றும் சொல்லப்படுகிறது.
இதைவிட முக்கியமாக இந்த விஷாலின் இந்த போராட்டம் குறித்து ரஜினி ஏற்கனவே தனது ஆதரவை தெரிவித்து விட்டார் என்றும் அவருக்கு தெரிந்தே இவையெல்லாம் நடக்கின்றன என்றும் சொலப்படுகின்றன. அதனால் தான் அவர் காலா ரிலீஸ் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.