ரஜினியின் ‘லிங்கா’ படத்தை வாங்கி விநியோகம் செய்ததில் பலத்த நட்டம் அடைந்ததாக சொல்லி பல போராட்டங்களை நடத்தி ரஜினியின் கவனத்தை ஈர்க்க முயன்றவர் விநியோகஸ்தர் சிங்காரவேலன். தன்னைப்போன்று பாதிக்கப்பட்டவர்களுக்காக ரஜினி ஒரு படம் நடித்து தர இருப்பதாக முதலில் வாக்குறுதி தரப்பட்டு, பின்னால் அதில் உண்மையிலை என்றதுமே டென்சனாகிவிட்டார்.
அதனால் இப்போது ரஜினியை கிண்டலடிக்கும் விதமாக ‘லிங்கா’ படத்தின் காமெடி காப்பியாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். இதில் சூப்பர்ஸ்டாராக நடிக்க இருப்பவர் பவர்ஸ்டார் சீனிவாசன் தான். அவரும் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு அட்வான்ஸும் வாங்கிவிட்டாராம்.. ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன்.. தலைவரை கிண்டலடிக்கும் விதமாக நடிக்க மாட்டேன் என்பதுதானாம் அது..
படம் எடுக்கப்படுவதே ரஜினியை கிண்டல் பண்ணவேண்டும் என்கிற நோக்கில் தான். ரஜினியாக மாறி நடிப்பது வேறு.. ரஜினியை கிண்டலடிப்பதாக நடிப்பது என்பது வேறு.. ஒரு படத்தில் பவர்ஸ்டார் எந்திரன் ரஜினியாக நடித்தபோது ரசிகர்கள் கைதட்டி ரசித்தார்கள்.. வாய்விட்டு சிரித்தார்கள். ஆனால் முழுப்படத்திலும் ரஜினி போலவே, அதிலும் ரஜினியை கிண்டலடிக்கும் விதமாக நடிக்கப்போகும் பவர்ஸ்டார், ரஜினி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் தப்பிப்பாரா..?