ஒரு ஹிட் படம் கொடுத்த டீம் தங்களது இரண்டாவது படம் ரிலீசாவதற்குள் இத்தனை பிரச்சனைகளை சந்தித்திருக்குமா என்பது சந்தேகம்தான்.. ஆனால் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரஜினி முருகன்’ படம் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவதும், பின்னர் மாற்றிவைக்கப்படுவதுமாக இருந்து வந்தது..
அத்தனைக்கும் காரணம் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸின் கடன் பிரச்சனைதான்.. அதையெல்லாம் சமாளித்து ஒருவழியாக டிச-4ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவித்து அதற்கான தியேட்டர்களையும் உறுதி செய்துவிட்டார்கள்.
ஆனால் சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் மழையில் படத்தை ரிலீஸ் பண்ணுவது என்பது ரிஸ்க் என்பதால் படத்தை வேறு ஒரு நாளில் ரிலீஸ் செய்யப்போவதாக லிங்குசாமி அறிவித்துள்ளார்.. ரஜினி முருகனை சோகம் விடாமல் துரத்துகிறதே..!