நடிகர்சங்க தேர்தலில் வென்று முதல் பொதுக்குழு கூட்டத்தை கூடினார்கள் விஷாலும் நாசரும். இந்த நிகழ்வின்போது நலிவுற்ற கலைஞர்களின் படிப்புக்காக பாரிவேந்தர், ஐசரி கணேஷ் என கல்வி நிறுவனம் நடத்திவருபவர்கள் இலவச கல்வி தருவதற்கு உத்தரவாதம் அளித்திருப்பதாக விஷால் குறிப்பிட்டார்..
உண்மையிலேயே இது நல்ல விஷயம் தான்.. ஆனால் எதிரணியினர் என்பதற்காக ஏதாவது ஒரு குற்றம் கண்டுபிடித்து தானே ஆகவேண்டும்.. அதனால் தான் நடிகர் ராம்கி, தனது சகளை சரத்குமாருக்காக பரிந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு, “கல்விக்காக பிச்சை எடுக்கவேண்டுமா..? அவமானமாக இருக்கிறது” என தனது குரலை உயர்த்தினார்.
சரி.. அப்படி என்றால் சரத்குமார் இத்தனை காலம் பதவியில் இருந்தாரே, அப்போது வசதியற்ற கலைஞர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி தர என்ன வழிவகை செய்தார் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.. ராம்கியும் நன்றாக சம்பாதித்தாரே.. அவர்தான் என்ன செய்தார்..? தானும் செய்யமாட்டார்கள், செய்பவர்களையும் விடமாட்டார்கள் என குறிப்பிட்ட ஆட்கள் இருக்கிறார்கள்.. அந்தப்பட்டியலில் தான் ராம்கியும் இருக்கிறார்.
இலவசமாக கல்வியை தர முன்வருபவர்கள் கடவுளுக்கு சமமாக போற்றப்பட வேண்டியவர்கள்.. ராம்கி போன்றவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்யாவிட்டாலும், உதவி செய்பவர்களை கொச்சைப்படுத்தாமலாவது இருக்க கற்றுக்கொள்ளட்டும்.