தேர்தலுக்கு முன்பே ராஜினமா.. விஷாலின் வியூகம்..!


விஷாலின் தலைமையில் ஒன்று திரண்டுள்ள தயாரிப்பாளர் அணி வரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலை முழு மூச்சுடன் சந்திக்க தயாராகி வருகிறது. நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போல இதிலும் அதிரடியான ஒரு விஷயத்தை முன்வைத்து அதிரடி பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார் விஷால்.

அதாவது விஷால் அணி சார்பாக தேர்தலில் நிற்பவர்கள் அனைவரும் இப்போதே ஆளாளுக்கு ராஜினமா கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டார்களாம். தங்கள் அணி பொறுப்புக்கு வந்தபின் சரியாக ஒரு வருடத்திற்குள் தாங்கள் சொன்னவற்றை நல்ல முறையில் தீர்த்து வைக்க தவறினால் தங்களது பதவிகளை ராஜினாமா செய்கிறோம் என முன்கூட்டியே உறுதியளித்து அதை உறுதிப்படுத்தும் விதமாக ராஜினமா கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டார்களாம்.

இந்த ராஜினமா கடிதங்களை இவர்கள் பொறுப்புக்கு வந்த உடனேயே சங்க அலுவலகத்தில் கொடுத்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது.