சமூக போராளியான ‘டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கையை மையமாக வைத்து அதே பேரில் எடுக்கப்படும் படம் தான் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூகத்திற்காக தனி மனிதனாக அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் சமூகப் போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்வை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..
டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க வரும் ஜூன்-22ஆம் தேதி விஜய் பிறந்தநாளில் இந்தப்படம் ரிலீசாகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இந்த விழாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து, டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.. . இந்தநிகஸ்வில் பேசிய எஸ்.ஏ,சி சமீபத்தில் தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினி பேசியதை தாக்கி கருத்து தெரிவித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சி, “இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி. ? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது . ? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது ? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் . டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் ” இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்..
ரஜினி நல்ல எண்ணத்தில் சொன்ன கருத்து அவரவர் ஆளாளுக்கு எப்படியெல்லாம் திரித்து அவரை விமர்சிக்கிறார்கள் பாருங்கள்.. என்ன செய்ய காய்த்த மரம் தானே கல்லடி படும்.