தமிழச்சி அடையாளம் மாற்றப்படுவதால் கோபத்தில் சாய் பல்லவி..!


கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன் டைரக்சனில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, அந்த ஒரே படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பிரபலம் ஆனார். அதற்கும் சில வருடங்களுக்கு முன் விஜய் டிவியில் நடைபெற்ற ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நிகழ்ச்சியில் நடனம் ஆட வந்திருந்த சாய் பல்லவியை பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், சரியாக ஆறுவருடங்கள் கழித்து சாய் பல்லவியை அழைத்து தனது பிரேமம் படத்தில் நடிக்க வைத்தார்.

ஆனால் மலையாள சினிமா மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்ததாக மலையாளத்திலும், தமிழிலும் ஆர்வம் காட்டாமல் தெலுங்கு திரையுலகம் பக்கம் பார்வையை திருப்பினார். அங்கே அவருக்கு வரவேற்பும் இருக்கிறது அதே நேரத்தில், தெலுங்கு மீடியாக்கள் அவரை மலையாளி, மல்லு கேர்ள் என்றே குறிப்பிடுகின்றனவாம்.

மலையாள நடிகையான இவர் ஒரு தமிழ் ஹீரோவை காதலிக்கிறார் என்றெல்லாம் கூட தெலுங்கில் செய்திகள் வெளியானது. இந்த காதல் வதந்தியை விட, தமிழச்சியான தன்னை மலையாளி என்று அழைப்பதுதான் சாய் பல்லவியை டென்சன் ஆக்குகிறதாம். இதனால் ஊடக சந்திப்புகளின்போதும், பட ஒப்பந்தங்களின்போது தன்னை தமிழ்ப்பெண் என்றே குறிப்பிடச்சொல்லி கோபமுகம் காட்டுகிறாராம்.