மீண்டும் சங்கடத்தில் சமந்தா…!


சமந்தாவை சந்தோஷப்பட விடக்கூடாது என சங்கல்பம் பண்ணிக்கொண்டு சங்கடப்படுத்தும் சருமநோய் மீண்டும் தலை தூக்கியுள்ளதாம்.(அப்பா.. எத்தனை ‘ச’..?) ஏற்கனவே இந்த சருமநோயால் அவதிப்பட்ட நேரத்தில் தான் மணிரத்னம் தனது ‘கடல்’ படத்தில் நடிக்க அழைத்தார்..இன்னொரு பக்கம் ஷங்கர் ‘ஐ’ படத்தில் அழைத்தார்..

ஆனால் சருமநோய் காரணமாக இரண்டு வாய்ப்புகளையும் அவரால் ஏற்கமுடியாமல் போனது. அதன்பின் கொஞ்சம் குணமானவர் சூர்யா, விஜய், தனுஷ் என மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றினார்.. மார்க்கெட் பீக்கில் இருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் சரும நோய் தலைதூக்கி இருப்பதால் சில முக்கியமான வாய்ப்புகளை வேண்டாம் என வேறுவழியில்லாமல் தவிர்த்து விட்டாராம் சமந்தா..