சமத்துப்பொண்ணா இருக்கும்னு பார்த்தா அப்பப்ப சம்மந்தா சம்மந்தமில்லாம எதையாவது பேசி வம்புல மாட்டிக்கிறதும், அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு சண்டைக்காரங்ககிட்டயே சரண்டராகிறதுமே சமந்தாவுக்கு வேலையா போச்சு. ஒரு பிளாஸ்பேக் பாத்துட்டு வருவோம் வாங்க..
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, ஹைதராபாத் போனப்ப ரோட்டுல கார்ல போகும்போது போஸ்டர் ஒன்ன பார்த்தார் சமந்தா.. அது மகேஷ்பாபு நடிச்சு அந்த சமயம் ரிலீஸாகவிருந்த ‘1-நேனொக்கடினே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அதுல பீச்சோரமா மகேஷ்பாபு நடந்துபோறது மாதிரியும், பின்னாடியே கதாநாயகி தரையில படுத்தமாதிரி அவரது காலடியில் தவழ்ந்து போறமாதிரியும் இருந்துச்சு.
இத பாத்த உடனே பொங்குன சமந்தா, உடனே டிவிட்டர்ல மகேஷ்பாபு படத்தோட போஸ்டர் பற்றி பெண்களை மட்டமா சித்திரிக்கிறதா காட்டமா கமென்ட் போட்டார்.. மகேஷ்பாபு ரசிகர்கள்கிட்ட டிவிட்டர்ல வாங்கிக்கட்டினார்… அப்புறம் போன வருஷம் ஒரு பங்ஷன்ல வச்சு மகேஷ்பாபு கூட ராசியானார்.. அதுக்கப்புறமா அவர் படத்துல ஹீரோயினா நடிச்சார் என ஜோதிகா சந்திரமுகியா மாறுன கதையை ரஜினி சொல்ற மாதிரி எல்லாம் வரிசையா நடந்துச்சு.
இப்ப லேட்டஸ்டா வாயை கொடுத்து வம்பிழுத்திருக்கிறது இன்னொரு தெலுங்கு ஹீரோவான அல்லு அர்ஜூன்கிட்ட.. இத்தனைக்கும் ரெண்துபேருக்கும் இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.. ஏதோ ஒரு தெலுங்குப்பட பங்ஷன்ல அல்லு அர்ஜூன் பேசும்போது, சமந்தா நடிச்ச எல்லா படமும் ஹிட்டாகுது.. அவர் ஒரு அதிர்ஷ்ட தேவதை, என் படத்துக்கும் அப்படியே கால்ஷீட் தந்து அருள் பாலிக்கணும்ங்கிற ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளிருக்கார்.
அடுத்து பேச வந்த சமந்தா இதை கண்டுக்காம விட்ருக்கலாம்.. இல்ல அல்லு அர்ஜூனுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு அடுத்த டாபிக் தாவியிருக்கலாம். அத விட்டுட்டு, அவர் சொல்றா மாதிரிலாம் எதுவும் இல்ல.. போன வருஷம் கூட நான் நடிச்ச படம்லாம் எதுவுமே சரியா போகலையே.. என உண்மையை விளம்பியிருக்கிறார்.
என்னய்யா ஒரு பேச்சுக்கு சொன்னது குத்தமா போச்சாய்யா என சமந்தாவின் பதில் பேச்சால் டென்சனுடன் விழா முடியும் வரை அமர்ந்திருந்தாராம் அல்லு அர்ஜூன். அடுத்த படத்துக்கு கால்ஷீட் தந்து சமந்தா கூல் பண்ணிருவாருன்னு வைங்க..
இருந்தாலும்…
சமந்தா.. இனிமே சமத்தா பேச கத்துக்குங்கம்மா..!