தமிழ்நாட்டை புறக்கணித்து ஹைதராபாத்துக்கு போன சமந்தா..?


இன்று காலை சென்னையில் சூர்யா நடித்த ‘24’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அவ்வளவு பெரிய ஜாம்பவானான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானே தான் இசையமைத்துள்ள படம் என்பதால் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.. நிச்சயம் படத்தின் புரமோஷனுக்கு இது நன்றாகவே உதவும்..

ஆனால் படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான நித்யா மேனன் விழாவிற்கு வந்ததுடன், மேடையில் அழகான தெலுங்கில் ஒரு பாடலையும் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் மியூசிக்கில் பாடி அசத்தினார். ஆனால் இன்னொரு நாயகியான சமந்தாவோ விழாவுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தார்..

இதனால் விழாவிற்கு வந்திருந்த சூர்யா ரசிகர்கள், விஜய், தனுஷ் படங்களில் நடித்தால் மட்டும் அந்த விழாக்களுக்கு போகும் சமந்தாவுக்கு சூர்யா படத்திற்கு வர முடியவில்லையோ என கோபமாக பேசிக்கொண்டு போனதையும் கேட்க முடிந்தது..

இது சமந்தாவுக்கு கேட்டு விட்டதோ என்னவோ, இன்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்ற இதே படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, காலையில் வராத குறையை சரிக்கட்டி, படக்குழுவினரின் முணுமுணுப்பில் இருந்தும் தப்பினார்.