நன்றி கெட்ட உலகமடா இது – ஷங்கர் விரக்தி..!


இதுவும் ஒரு டைட்டில் தொடர்பான மேட்டர் தான். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் படத்திற்கு அனைவருமே எந்திரன்-2 என்றுதான் பெயர் வைக்கப்படும் என எதிர்பார்த்தார்கள்.. ஆனால் திடீரென ‘2.O’ என அறிவிக்கப்பட இது என்னடா புதுசா இருக்கு என ரஜினி ரசிகர்களே குழம்பித்தான் போனார்கள்..

வழக்கமாக தனது படங்களின் தலைப்பு பெரும்பாலும் ‘ன்’ என முடியுமாறு வைப்பது ஷங்கரின் சென்டிமென்ட். அதன்படி இதற்கும் எந்திரன்-2 என முதல் பாகத்தின் பெயரே இருக்கட்டும் என நினைத்தார்.. ஆனால் இந்திரனை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இந்த டைட்டிலை தருவதில் உடன்பாடு இல்லாததால் வேண்டுமென்றே ஷங்கரை அலைக்கழித்ததாம்.

நம் உழைப்பால் எத்தனை கோடி ரூபாய் அந்தப்படத்தின் மூலம் சம்பாதித்திருப்பார்கள். இருந்தும் இப்படி பண்ணுகிறார்களே.. நன்றி கேட்ட உலகமடா இது என வருத்தப்படுத்தான் தற்போதைய பெயரை வைத்தாராம் ஷங்கர்..