சமீபத்தில் சந்தானமும் ஆஷ்னா ஜவேரியும் ஒன்றாக திருப்பதி கோவிலுக்கு சென்றுவந்த போட்டோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.. ஏற்கனவே இரண்டு படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டு ரகசிய திருமணம் செய்துகொள்வதற்காகத்தான் திருப்பதி சென்றார்கள் என செய்திகள் கசிய ஆரம்பித்துவிட்டன.
ஆனால் புதியபடம் தொடங்குமுன் சந்தானம் திருப்பதிக்கு சாமி கும்பிடப்போவது வழக்கம், அதுபோலத்தான் இப்போதும் படக்குழுவினருடன் அங்கு போயிருக்கிறார், சாமி கும்பிட்டுவிட்டு வரும்போது எடுத்த புகைப்படம்தான் அது எனவும் சந்தானம் தரப்பில் கூறுகின்றனராம்.. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப்படத்திலும் ஆஷ்னா நாயகியாக நடிக்க இருக்கிறார்.
ஒரு படத்தில் நடித்தாலே கிசுகிசுவுக்கு பஞ்சம் இருக்காது.. இதில் மூன்றாவது படத்தில் நடித்தால் கேட்கவா வேண்டும். அதுவும் பட்டுவேட்டி சட்டையில் சந்தானம், ஆஷ்னாவின் கையை பிடித்து அழைத்தபடி நடந்து வருவது என்பது செய்தியில் உண்மை இருக்குமோ என சந்தேகப்பட வைக்கத்தானே செய்யும்.
சரி இந்த போட்டோ எப்படி லீக்கானது.. ஏன் லீக்கானது என்றால் இதன் பின்னணியில் சந்தானத்தின் கை தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் கோவிலுக்கு சென்றுவந்தால் அவர் சாமி கும்பிடுவதுபோல ஒரு போட்டோவை வெளியிட்டாலே போதுமே… ஆனால் இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டால் தான் பரபரப்பு தானாகவே பற்றிக்கொள்ளும்.. அது அடுத்த படத்துக்கு பப்ளிசிட்டியாக மாறும் என கணக்கு போட்ட சந்தானம் தான் இந்த ஐடியாவை ஒகே பண்ணினாராம்.