சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம் பிஸ்கோத் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!


A1 திரைப்படத்திற்குப் பிறகு சந்தானம் ஆர் கண்ணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்புதிய திரைப்படத்திலும் A1 திரைப்படத்தில் நாயகியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகமாகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர்.

இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு ‘பிஸ்கோத்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

மசாலா பிக்ஸ், எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.