முன்பெல்லாம் ரஜினியும் அதன்பிறகு விஜய்யும் தான் தங்களது படங்களின் ஹீரோயின்கள் தங்களுடன் இத்தனை படங்களில் மட்டுமே நடிக்கவேண்டும் என ஒரு கணக்கு வைத்திருப்பார்கள்.. ஹீரோயின் தேர்வு வேண்டுமானால் டைரக்டர் சாய்ஸ் ஆக இருக்கலாம்.. ஆனால் ஒவ்வொரு ஹீரோயினுக்கும் மூன்று அல்லது நான்கு படங்களுக்கு மேல் இவர்கள் போகாமல் பார்த்துக்கொள்வார்கள்..
அப்போதெல்லாம் இதனை பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு கிசுகிசுக்கள் வந்ததில்லை.. ஆனால் இப்போது ஒரு படத்தில் நடித்த ஹீரோயினுடன் அடுத்த படத்தில் நடித்தாலே கிசுகிசு வந்துவிடுகிறதென்று இரண்டாவது முறை அவர்களுடன் சேர்ந்து நடிக்க பல ஹீரோக்கள் தயங்குகிறார்கள்.
ஆனால் இப்போது ஹீரோவாகிவிட்ட சந்தானமும் இந்த பாணியைத்தான் பின்பற்றுகிறார். தன்னுடன் நடித்த ஆஸ்னா ஜவேரிக்கு இரண்டு படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். அத்துடன் அவ்வளவுதான்.. அடுத்தாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த வைபவி சாண்டில்யாவின் திறமை பிடித்துப்போகவே அவருக்கு தனது இன்னொரு படமான ‘சக்கபோடு போடு ராஜா’ படத்திலும் ஹீரோயின் சான்ஸ் தந்துள்ளார்.
அடுத்ததாக செல்வராகவன் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதிதி பொஹன்கர் என்கிற மராத்திய நடிகை ஒப்பந்தமாகி இருக்கிறார்.. யார் கண்டது, இவரும் சந்தானத்துடன் இன்னொரு படத்தில் நடித்தாலும் நடிக்கலாம். சினிமாவை பொறுத்தவரை எதுவேண்டுமானாலும் நடக்கலாம் தானே..?