கடந்த வருடம் வரை அம்மாவாக நடிக்க நடிகை சரண்யாவை விட்டால் நடிக்க ஆளே இல்லை என்கிற நிலை தான் இருந்தது.. மிகவும் யதார்த்தமான நடிப்பில் கூடவே காமெடி, சென்டிமென்ட் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து நடிப்பை வெளிப்படுத்திவந்த இவரது கால்ஷீட் டைரி இப்போது நிறைய பக்கங்கள் காலியாக காணப்படும் நிலையில் உள்ளது..
அதுமட்டுமல்ல, இப்போது ஒரு படத்தில் பாட்டியாக புரமோஷன் கொடுத்துவிட்டார்களாம். எதனால் ‘அம்மா’ வாய்ப்புகள் குறைந்தன என புரடக்சன் மேனேஜர் ஒருவரின் வாயை கிளறியபோது, தொடர்ந்து ஒரே மாதிரியான, மகனின் காதலுக்கு உதவுகிற அம்மா கேரக்டரில் அவரை பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு போரடித்து போனதுதான் காரணம் என்கிறார்… உண்மை தானோ..?