முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப்பின் தமிழகத்தில் அசாராதண சூழல் நிலவுகிறது என சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசியபோது சூப்பர்ஸ்டார் ரஜினி குறிப்பிட்டார்.. இதற்கு தமிழகத்தில் ஆளும் தரப்பில் உள்ள அரசியல்வாதிகளே எந்த கருத்தும் கூறாமல் அமைதியாக இருக்கின்றனர்..
ஆனால் இதில் எந்த சம்பந்தமும் இலாத சரத்குமாரோ, திடீரென ரஜினிக்கெதிரான கருத்துக்களை கூறியதோடு, ரஜினி அரசியலில் நின்றால் தான் முதல் ஆளாக எதிர்ப்பேன் என்றும் கூறினார்.. இதன்மூலம் தற்போதுள்ள புதிய மேலிடத்தின் நம்பிக்கை பார்வையை தன் மீது விழச்செய்வது தான் அவரது எண்ணம்..
ஆனால் அதன்பின் நடந்ததோ வேறு.. ரஜினியை பற்றி தேவையில்லாமல் பேசியதற்காக ரஜினி ரசிகர்கள் பொங்கி எழுந்து சரத்குமாரின் கொடும்பாவிகளை கொளுத்த ஆரம்பித்தனர். போஸ்டர்கள் ஒட்டினர்.. அவரது ட்விட்டர் கணக்கில் வண்டை வண்டையாக திட்டி பதிவிட்டனர்..
இது ஏதுடா வாமபா போச்சு என இதனால் அரண்டுபோன சரத்குமார்,, நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை, ரஜினி என் நண்பர், இனியவர் என்றுதான் சொன்னேன். சிலர் அதை தப்பாக திரித்து செய்தியாக்கி விட்டார்கள் என கதறாத குறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. ஆனாலும் தீவிரம் இன்னும் குறைந்தபாடில்லை.