“ஸ்ரேயா பேசவே இல்லை” ; சீனியர் காமெடி நடிகர் வருத்தம்..!


ஸ்ரேயா.. ஒருகாலத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து பயங்கர அலப்பறையை கொடுத்தவர், இன்று சுந்தர்.சி பட டைட்டில் ஆகிவிட்டார்.. அதாங்க முத்தின கத்திரிக்காய்’.. ஆனாலும் அவருக்கும் ஒரு மறுவாழ்வு தருவேன் என அடம்பிடித்த சிம்பு, தான நடிக்கும் ‘ஏஏஏ’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்..

நாம் சொல்லவந்த விஷயம் இதல்ல.. இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் ஒய்.ஜி.மகேந்திரனும் நடித்து வருகிறார்.. சில வருடங்களுக்கு முன் ‘கந்தசாமி’ படத்தில் ஒய்.ஜியுடன் சேர்ந்து நடித்தார் ஸ்ரேயா.. ஆனால் அப்போது தன்னை பெரிய ஹீரோயினாக நினைத்துக்கொண்டு ஒய்.ஜி.மகேந்திரனை எல்லாம் ஒரு ஆளாக மதிக்காமல் பந்தாவாக நடந்துகொண்டாராம்.

என்ன இந்த பொண்ணு இப்டி அலட்டல் பண்ணுது என நினைத்தாராம் ஒய்.ஜி. ஆனால் இப்போது சிம்பு பட ஷூட்டிங்ஸ்பாட்டில் ஒய்.ஜியுடன் வலிய வந்து கலகலப்பாக பேசுகிறாராம்.. மார்க்கெட் போனால் தான் நாமெல்லாம் கண்ணுக்கு தெரிகிறோம் என ஒய்.நினைத்துக்கொண்டிருப்பார் தானே..?