தனி கேரவன் கேட்டு அம்மா நடிகை அலப்பறை..!


இன்றைய நிலையில் முன்னணி கதாநாயகிகள் பலரும் ஷூட்டிங்ஸ்பாட் வந்தோமோ அமைதியாக நடித்தோமோ என இருக்கின்றனர்.. ஆனால் சீனியர் அம்மா நடிகையான ரோகிணியோ ஷூட்டிங்ஸ்பாட்டில் காட்டும் பந்தாவுக்கு அளவே இல்லை என படக்குழுவினர் குமுறுகின்றனர்..

இவருக்கு கேரவன் வசதி கொடுத்தாலும் கூட, இரண்டு பேர் கேரவன் வேண்டாம், தனக்கு தனி கேரவன் தான் வேண்டும் என அடம் பிடிக்கிறாராம்..

மேலும் ஒவ்வொரு ஷாட் இடைவேளையின்போதும் மொபைலை தூக்கி கையில் வைத்துக்கொண்டு எந்நேரமும் வயசுப்பெண் போல சாட்டிங்கில் இருக்கும் இவரை அடுத்த ஷாட்டுக்கு அழைப்பதற்கே உதவி இயக்குனர்கள் ‘நீ போ.. இல்ல நீ போ..” என பயந்துபோய் கிடக்கிறார்களாம்.