ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுபிடிகளை வைத்து கெடுபிடி செய்வதில் பெயர் போனவர் ஷங்கர்.. தனது படம் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம், ஒரு செய்தி தனது அனுமதியில்லாமல் வெளியே போய்விட கூடாது என்பதற்காகவே பவுன்சர்களை வைத்து ஷூட்டிங் ஸ்பாட்டை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருபவர்..
அப்படிப்பட்ட கண்கொத்தி பாம்பின் கண்ணையே ஏதோ ஒரு கீரிப்புள்ள கொத்திவிட்டது.. ஆமாங்க.. ரஜினி நடிக்கிற 2.O படத்துக்காக நேரு ஸ்டேடியத்துல வச்சு ஓர் விளையாட்டு சம்பந்தமான காட்சியை ஷங்கர் சில தினங்களாக படமாக்கிட்டு வர்றார்.. இதுல அக்சய் குமார் வில்லனா நடிக்கிறார் இல்லையா..?
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எப்படியோ வெளியே லீக்காகிருச்சு.. வில்லனா நடிக்கிற அக்சய்குமாரோட கெட்டப்பே வித்தியாசமா இருக்குன்னு ரசிகர்கள் ஆச்சர்யத்தில் குதிக்க, ஷங்கரோ யார் இந்த வேலையை பண்ணியது என கடும் கோபத்தில் இருக்கிறாராம்.