பயந்தமாதிரியே நடந்துவிட்டது… ஆம்.. ‘புலி’யையும் விட்டுவைக்கவில்லை ஸ்ருதிஹாசனின் ராசி.. ஸ்ருதி அழகான அதேசமயம் மிகவும் திறமையான நடிகை தான். தெலுங்கில் ஹிட் கொடுத்திருக்கிறார் தான். ஆனால் அவர் தமிழ்சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகிவிட்டன.
இந்த 7 வருடங்களில் தமிழில் தற்போது வெளியான ‘புலி’யுடன் சேர்த்து நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.. ஆனால் நான்கு படங்களும் அட்டர் பிளாப் என்று சொல்லும்படி இல்லாவிட்டாலும் ஆவரேஜ் ஹிட் என்பதையே தொடமுடியவில்லை.. இவருக்கு முந்தைய பிந்தைய நடிகைகள் எல்லாமே ஆளுக்கொரு சூப்பர்ஹிட்டாவது கொடுத்து விட்டார்கள்.
இது ஒருபக்கம் இருக்க அடுத்ததாக அஜித்துடன் இணைந்து வேதாளம் படத்தில் ஸ்ருதி நடித்துள்ளார் இல்லையா..? இந்தப்படத்தின் தயாரிப்பாளர் எதிர்பார்ப்பது மாபெரும் ஹிட்டை.. ஏற்கனவே இவர்கள் படம் முழுவதும் வியாழக்கிழமை சென்டிமென்ட் பார்க்கிறவர்கள்..
அதனால் தான் ஸ்ருதியின் ராசி எங்கே இந்தப்படத்தையும் திக்கித்திணற வைத்துவிடுமோ என்கிற பயம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துக்கு இருக்கிறதாம். இருந்தாலும் லட்சுமி மேனனின் ராசி தன்னை காப்பாற்றி விடும் என நம்புகிறாராம். அப்ப அஜித்..? அவர் இந்த ராசிக்கணக்கில் வரமாட்டார்.