ஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகும் சிங்கம்-3 யில் நடிக்க இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்தப்படத்தில் சூர்யாவுடன் நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள ஸ்ருதி, “சூர்யா தனது படங்களில் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்.. அவருக்கு நன்றி” எனவும் கூறியுள்ளார்..
என்னே அடக்கம்.. என்னே பணிவு.. ஆனால் இதே அம்மணி, சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகிவிட்டு, திருமணத்தன்று மணப்பெண் காதலனுடன் எஸ்கேப் ஆவதுபோல, அஜித் பட வாய்ப்பு கிடைத்ததும் கார்த்தியை உதறிவிட்டு ஓடியதை எவ்வளவு வசதியாக மறந்துவிட்டார் பாருங்கள்.
அதற்காக அந்த படக்குழுவினரிடமோ, அட்லீஸ்ட் கர்த்தியிடமோ ஒரு வருத்தம் கூட இவர் தெரிவித்ததாக தெரியவில்லை.. சரி.. அவர் குணம் தான் அப்படி.. தனது தம்பியை அவமானப்படுத்திய காரணத்திற்காக சூர்யாவாவது ஸ்ருதிஹாசானை ஒப்பந்தம் பண்ணாமல் நோஸ்கட் பண்ணி, அந்த வேதனையை அவருக்கும் உணர்த்தியிருந்தால் நன்றாக இருந்திக்கும்..
ம்ஹூம். சினிமா என்றால் இங்கே, மார்க்கெட்டிங்கும் விளம்பரமும் அதைவைத்து வியாபாரமும் தானே நடக்கிறது… இதில் வருத்தமாவது, மன்னிப்பாவது..?