இதுவரை மூன்று படங்களில் நடித்துள்ள விக்ரம் பிரபுவின் அடுத்து வெளிவரவிருக்கும் படம் தான் சிகரம் தொடு. தூங்கா நகரம் படத்தை இயக்கிய கௌரவ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு இசையமைத்த இமான் மீண்டும் இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு இசையமைத்துள்ளார். சிகரம் தொடு படத்தில் ஏற்கனவே டக்கு டக்கு பாடல் எங்கு திரும்பினாலும் ஒலித்துக் கொண்டிருக்க, படத்தின் டிரெய்லரும் பட்டையை கிளப்பியுள்ளது. படத்தின் டிரெய்லர் ரிலீஸான ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம் என்று யுடிவி தனஞ்செயன் அறிவித்திருந்தார், தற்போது சிகரம் தொடு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். படம் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வருகிறது. அப்பா மகன் பாசம் மற்றும் ஏடிஎம் கொள்ளையை மையப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்…