சென்னை நகரெங்கும் மழை வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் கால்வாசி கூட மீண்டுவரவில்லை.. கடலூரிலோ அதைவிட பாதிப்பு.. மக்கள் மரண பயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் இந்த சமயத்தில் தங்களது படங்களை ரிலீஸ் செய்தால் அதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற பயத்தில் போனவாரம் ‘உறுமீன்’ இந்தவாரம் ‘ஈட்டி’ என பார்த்து பார்த்து ஒவ்வொரு படமாக விடுகின்றார்கள்.
ஆனால் இது எந்த கவலையுமே இல்லாதவர் போல, தான் அசிங்கமான வார்த்தைகளில் எழுதி அதை பாடலாக பாடி யூடியூப்பில் வெளியிட்டுள்ளார் சிம்பு.. இதற்கு ஒல்லிக்குச்சி இசையமைப்பாளர் அனிருத்தும் துணை. “என்ன பு******க்கு லவ் பண்ணுன” என ஆரம்பிக்கும் அந்தப்பாடல் பெண்கள் இனத்தையே மிக மோசமாக இழிவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது..
கெட்டவார்த்தைகளை பீப் சவுன்ட் கொடுத்து மறைத்தாலும் அது என்ன வார்த்தை என கேட்பவர்களுக்கு தெரியும்படி அரைகுறையாகவே மறைத்திருக்கிறார்கள்.. மறைப்பது இருக்கட்டும்.. மற்றவர்கள் முன்னால் பேசவே கூசும் அந்த வார்த்தையை வைத்து பாட்டு எழுதும் மனம் ஒருவனுக்கு இருக்கிறது என்றால் அவன் எவ்வளவு அழுக்கான மனம் கொண்டவனாக இருப்பாண் என சிம்பு மீது பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வசைபாட ஆரம்பித்துவிட்டனர்.
மக்கள் மழைவெள்ள பாதிப்பில் இருக்கும்போது, அதில் ஒரு சிரு துரும்பு கூட உதவி செய்வதற்கு இறங்கிவராத சிம்பு, இப்போது இவ்வளவு கேவலமான பாடலை எழுதி பாடியதோடு அதை சந்தர்ப்பம் தெரியாமல் வெளியிட்டது இமாலயத்தவறு.. யாரேனும் புகார் கொடுத்தாலோ, வழக்கு தொடுத்தாலோ சிம்பு மட்டுமல்ல, அணிருத்தும் கம்பி எண்ணவேண்டிய நிலை தான் ஏற்படும்..
ஆனால் இவ்வளவு எதிர்ப்புகளுக்கும் இடையே, “நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து “நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்” என்று கேட்டால் என்னவாகும்” என எகத்தாளமாக சிம்பு கேள்வி கேடிருப்பதுதான் அக்கிரமத்தின் உச்சம்.
இன்னும் ஒருபடி மேலேபோய், “இணையத்தில் தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கிறது. தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல என் பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்” என ஆணவத்துடன் பதிலளித்துள்ளார்.. ஆணவக்காரர்களின் கதி என்னவானது என்பது வரும் நாட்களில் சிம்புவுக்கு புரியும் என்பது மட்டும் உண்மை.