சிம்பு சிக்கினால் இன்னும் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறுமாமே..!?


சினிமாவில் இதுவரை பல படங்களில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியிருக்கும் சிம்பு, இந்தமுறை ரியலாகவே எஸ்கேப் ஆகியுள்ளார்.. எல்லாம் இந்த பீப் சாங்கால் வந்த வினை.. சரி போனால் போகிறதென்று செய்த தவறுக்கு மன்னிப்பு தெரிவித்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவார் என பார்த்தால் அவரோ நான் தவறே செய்யவில்லை, அதை திருட்டுத்தனமாக வெளியிட்டவன் மேல் நடவடிக்கை எடுங்கள் என்கிறார்..

அதாவது என் வீட்டில் என் சொந்த உபயோகத்திற்காக கஞ்சா வளர்த்தேன், அதை யாரோ எனக்கு தெரியாமல் திருடிக்கொண்டு போய் வெளியே வித்திருக்கிறான்.. அப்படி வித்தவனை கைது செய்யுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது சிம்புவின் ஸ்டேட்மென்ட்டும்..

சரி அவரது அப்பா, அம்மாவாவது தன் பையனை மன்னிப்பு கேட்க சொல்வார்கள் என்று பார்த்தால், அவர்களோ சிம்பு செய்ததில் என்ன தவறு இருக்கிறது என்கிற ரீதியில் தான் பதில் சொல்கிறார்கள்.. சிம்புவின் அம்மா ஒருபடி மேலாக, என் பையனை ஏன் துரத்துகிறீர்கள், எங்கள் நிம்மதியை ஏன் கெடுக்கிறீர்கள்.. நாங்கள் ஊரைவிட்டே போகிறோம் என ஒப்பாரி வைக்கிறார்..

இது ஒருபக்கம் இருக்க, இந்த பீப் பாடலை, சிம்புக்கு நெருக்கமானவர்களே வெளியிட்டிருக்க வேண்டும். வெளியிட்டவர்கள் யார் என, சிம்புக்கு தெரிந்திருக்க வேண்டும்., அவர்கள் சிக்கினால், பல விஷயங்கள் வெளியாகும் என்பதாலேயே இவ்விஷயத்தில் சிம்பு தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. புது வருஷம் தொடங்குவதற்குள் இந்தப்பிரச்சனை முடிவுக்கு வருமா என்பது தெரியவில்லை.. அதேபோல வரும் புத்தாண்டு சிம்புவுக்கு உள்ளேயா..? வெளியவா என பலர் பெட் கட்ட ஆரம்பித்துவிட்டார்களாம்…