சிம்புவின் ‘பீப் சாங்’கிற்கு இளம்பெண்களிடம் எதிர்ப்பு குறைவாக இருக்கிறதா..?

நாலஞ்சு கெட்ட வார்த்தைகளை போட்டு அது என்ன வார்த்தை என தெரியும் அளவுக்கு ‘பீப்’ என ஒரு ஒலியை வைத்து மறைத்து சிம்பு நாராசமாக ஒரு பாடலை எழுதினாலும் எழுதினார்.. அது இந்த அளவுக்கு இழுத்துக்கொண்டு போகும் என அவரே நினைத்திருக்க மாட்டார். ஒருபக்கம் அவர் மேல் வழக்கு, உருவ பொம்மை எரிப்பு, கண்டன போராட்டம் என நடந்துகொண்டிருக்கிறது..

இன்னொரு பக்கம் ஒரு வார இதழின் நிருபர் ஒருவர் ஜன நெருக்கடி மிகுந்த சாலையில் செல்வோரிடம், குறிப்பாக இளம்பெண்களிடம் இந்த பீப் சாங் பத்தி என்ன நினைக்கிறீங்க என கேட்டதுக்கு அந்த பெண்களில் பலர் சொன்ன பதில் உண்மையிலேயே அதிர்ச்சி ரகம் தான்.

பல பெண்கள், “அந்த பாடலில் ஒன்னும் தப்பா இருக்குற மாதிரி தெரியலையே, அவர் அவரோட பீலிங்க பத்தி பாடிருக்கார்.. அவ்வளவுதான்.. தேவையில்லாம மத்தவங்கதான் அதை பெரிசாக்குறாங்க,” என்று கூற, இன்னொரு அம்மாவோ  “சிம்பு தம்பி நல்ல தம்பி.. பாடினது தப்புதான்னாலும் ரொம்ப ஓவரா அவரை விரட்ட கூடாது” என சப்போர்ட் பண்ணுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது கலி முத்திடுச்சு தான் என சொல்லத்தோன்றுகிறது.