தமிழ் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இருந்தால் அது எம்.பியான அன்புமணி ராமதாஸுக்கு அறவே பிடிக்காது.. சுகாதார துறை அமைசராக இருந்த அன்புமணிக்கு, பாபா படத்தில் ரஜினியை சீண்ட ஆரம்பித்த இந்த பழக்கம் இப்போது விஜய் நடித்த சர்கார் படத்தில் விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பதை கண்டிக்கவும் வைத்திருக்கிறது. அதேசமயம் படங்களில் மது அருந்தும் காட்சி இருந்தால் சின்னய்யா ஒன்றும் சொல்ல மாட்டார்..
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தில் நடிக்கும் சிம்பு, தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக அன்புமணிக்கு சவால் விட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சினிமாவுக்கு பலவிதங்களில் பிரச்சனைகள் வருகின்றன. பாபா தொடங்கி இப்போது சர்கார் வரை அது தொடர்கிறது.
சர்க்கார் படத்தில் புகைபிடிப்பது பற்றி அன்புமணி ராமதாஸ் கருத்து சொல்லியிருந்தார். சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகள் ஏன் இடம் பெறுகின்றன என்பது குறித்து இப்போது நான் சொல்வதை வீட்டா, ஒரு விவாத மேடையில் வைத்து பதில் சொன்னால் சரியாக இருக்கும். அன்புமணி இதற்கு சம்மதித்தால், எங்கே எப்போது என்று இடத்தை சொல்லட்டும், அங்கே வந்து ஒரு நடிகனாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.என கூறியுள்ளார்..
அந்தவகையில் ரஜினிக்கு அடுத்ததாக அன்புமணி ராமதாஸின் இந்தப்போக்கை தைரியமாக எதிர்த்தவர் என்றால் அது சிம்புதான் அந்தவிதமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பா.ம.க தொண்டர்களுக்கு சிம்பு வேலைகொடுத்துவிட்டார்.