சிம்பு பிரச்சனையை திசை திருப்புகிறாரா கௌதம் மேனன்..?


பீப் பாடல் விவகாரத்தில் சிம்புவின் பெயர் நாறிப்போனதுதான் மிச்சம். மன்னிப்பு என்கிற ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சிம்பு கேட்டிருந்தால் இவ்வளவு தூரத்திற்கு பிரச்சனை பெரிதாக வளர்ந்திருக்காது.. ஆனால் அதை துடைத்தெடுக்க சிம்புவோ, அவரது பெற்றோரோ கூட தயாராக இல்லை என்பதும் சுடுகின்ற உண்மை..

இந்த நிலையில் சிம்புவின் படங்கள் என்ன கதியாகுமோ என கேள்விக்குறியாகியுள்ள இந்த நேரத்தில் கௌதம் மேனன் சிம்புவை வைத்து தான் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ பட டீசரை வெளியிட்டு சிம்பு பிரச்சனையை திசைதிருப்பி, அவர் மீது ஒரு நல்ல இமேஜை கொண்டுவர முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த அளவுக்கு சிம்பு ஒர்த் இல்லையே என்கிறது சினிமா வட்டாராம்.