மாஸ்டர் பிளான் ஒன்றை ரெடி பண்ணினார் இயக்குனர் கவுதம் மேனன்.. அதாவது தனுஷை வைத்து தான் இயக்கிவரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் சிம்புவை வைத்து இயக்கிவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களின் பாடல் காட்சிகளை ஒரே நேரத்தில் துருக்கி நாட்டில் வைத்து ஷூட் பண்ணிவிடலாம் என நினைத்தார்..
சிம்புவும் இந்த திட்டத்திற்கு ஒகே சொல்லிவிட, உற்சாகமாக துருக்கி சென்று, தனுஷ் படத்தின் பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்.. இன்னும் ஒருசில தினங்களில் சிம்புவின் பாடலை படமாக்கவேண்டும்.. கதாநாயகி மஞ்சிமா மோகனும் அங்கே போய்விட்டார். சிம்பு வரவேண்டியது மட்டும் தான் பாக்கி..
இந்நிலையில் கிளம்பி வரச்சொல்ல, அவரோ வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, தனுஷை ஷூட்டிங் முடிந்தால் கிளம்பி இங்கே வரச்சொல்லுங்கள்.. அதன்பின் நான் அங்கே வருகிறேன்.. ஒரே உறையில் இரண்டு கத்திகள் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என சொல்லி கிடுக்கிப்பிடி நிபந்தனை போட்டுவிட்டாராம். எந்த நம்பிக்கையில் சிம்புவை எல்லாம் நம்பி இவர் திட்டம் போடுகிறார் என யூனிட்டில் உள்ளவர்களே தலையில் அடித்துக்கொள்கிறார்களாம்.