பீப்’ பாடல் விவாகரத்தில் தனக்கு எப்படியும் முன் ஜாமீன் கிடைத்துவிடும் என நேற்றுவரை நம்பிக்கையுடன் இருந்தார் சிம்பு. ஆனால் இன்று காலை வாதாடிய அரசு தரப்பு வக்கீல் சிம்புவுக்கு முன் ஜாமீன் கொடுக்க கூடாது என கூறியதும், வழக்கை விசாரித்த நீதிபதி மதியத்திற்கு மேல் வழக்கை தள்ளி வைத்ததும் அந்த நம்பிக்கையை பாதி உடைத்தது.
மதியத்திற்கு மேல் மீண்டும் வழக்கை விசாரித்ததில் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனால் தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்கிற பயத்தில் தலைமறைவாகியுள்ளார் சிம்பு