ஆசை காட்டிய சிம்பு ; கதவை சாத்திய ஹன்சிகா..!


பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு கைமாறியபின் சூழ்நிலை கொஞ்சம் டைட்டாகிவிட்டது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் எடுத்தால் போதும் என்கிற நிலையில் நயன்தாராவை ஒரு பாடலுக்கு மட்டுமாவது நடித்து கொடுங்கள் என கேட்டதற்கு முடியவே முடியாது என கூறிவிட்டார். காரணம் படத்திற்காக அவர் ஏற்கனவே கொடுத்திருந்த கால்ஷீட் சிம்புவின் சோம்பேறித்தனத்தால் வீணாகிவிட்டதாம்.

அதனால் இப்போது அந்த பாடலை ஹன்ஷிகாவை வைத்து எடுத்து விடலாம் என திட்டம் போட்டார் சிம்பு… முதல் காதலி நயன்தாராவே தன்னுடன் நடிக்கவந்துவிட்டார்.. ஹன்சிகா மட்டும் வராமலா போய்விடுவார் என மனக்கணக்கு போட்ட சிம்பு, ஐந்து நாள் கால்ஷீட், ஐம்பது லட்சம் என சிலர் மூலமாக ஹன்சிகாவுக்கு தூதுவிட்டார்.. ஆனால் ஹன்சிகாவோ வந்தவர்களிடம் கோபப்படாமல் பேசி வெளியே அனுப்பி கதவை சாத்திவிட்டாராம்.