சிம்புவை இளையதலைமுறை நடிகர் என பலரும் சொல்லிக்கொண்டிருக்க அவரோ, தான் விஜய், அஜீத்துக்கெல்லாம் சீனியர் நடிகர் என தனது பேச்சில் அவ்வப்போது காட்டி வருகிறார். சமீபத்தில் வாலு’ படத்தின் சக்சஸ் மீட்டில் (படம் வெற்றியாமே..!) பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிம்பு.. அப்போதும் இந்த சீனியாரிட்டியை வெளிப்படுத்த சிம்பு தவறவில்லை.
இத சந்திப்பில் நடிகர்சங்க தேர்தல் பற்றிய பேச்சு எழுந்தது. அதில் உங்கள் ஆதரவு யாருக்கு என சிம்புவிடம் கேட்டபோது முதலில் மழுப்பலாக “நான்லாம் விஜயகாந்த் காலத்திலிருந்தே உறுப்பினராக இருந்து வருகிறேன்.. அப்போது போலவே இப்பவும் போட்டியின்றி நடிகர்களை தேர்ந்தெடுக்க ஒருபக்கம் முயற்சி நடக்கிறது” என்றார்.. அதன்பின் அழுத்தி கேட்டதும், சரத்குமாருக்குத்தான் தனது ஆதரவு என்றார்.
அதாவது தான் சிறுவனாக எண்பதுகளில் இருந்தே, நடித்து வருவதால் தன்னை எப்போதுமே சீனியராக காட்டிக்கொள்வதையே சிம்பு விரும்புவார். ஏற்கனவே இப்படி சீனியாரிட்டி கெத்து காட்டித்தான் விஜய் டிவி ஷோ ஒன்றில் தனக்கு நடனம் கத்துக்கொடுத்த பப்ப்லுவிடமே உரசி, பின்னர் தடாலென கண்ணீர் விட்டு பல்டி அடித்த கதை தான் உங்களுக்கு தெரியுமே.