நடிக்க இசைந்த இசைகலைஞர்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கும் படம் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தின் மூலம் பல திறமையான புதுமுகங்களை அறிமுகம் செய்கிறார் இயக்குனர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகிறார் கர்நாடக இசைக் கலைஞர் சௌமியா. தனது மென்மைமிக்க குரலால் அனைவரையும் வசீகரித்த இவர், பற்பல விருதுகளுக்கு உரித்தானவர். “ இசையின்பால் எனக்கு இருக்கும் ஆர்வமே இப்படத்தில் நடிக்க காரணம். படத்திலும் பாடகராக வரும் நான் ஜனனியின் தாயாக நடித்திருக்கிறேன். ஜனனி, என்னை சிறு வயதில் பார்த்தாற்போல் உள்ளது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.” என்றார் சௌமியா. “ படத்தில் அவர் நடிக்கும் கதாப்பாத்திரம் ஒரு பாடகர் என்பதால் நடிக்க வைத்தோம். ஜனனி- சௌமியா இருவரும் நிஜ வாழ்க்கை அம்மா மகள் என பலரையும் நம்ப வைத்தது. ஒரு புதுமுக நடிகருக்கான எந்த தயக்குமுமின்றி நடித்து கொடுத்தார் சௌமியா” என கூறினார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.