எல்லை மீறிய சிவகார்த்திகேயன் ; தலையில் தட்டிய விஷால்..!
எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் பத்திரிகை விளம்பரங்களில் கால் பக்கத்துக்கு மேல் இடம்பெறக்கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகளில் ஒன்று. அந்த விளம்பரம் கூட படத்தின் முக்கிய நிகழ்வுகளான பூஜை, ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் ஆகிய நாட்களில் மட்டும் தான் கொடுக்கப்படவேண்டுமே தவிர, மற்ற நாட்களில் எல்லாம் சிறிய அளவிலான விளம்பரம் மட்டுமே தரப்பட வேண்டும்..
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மோகன்ராஜா டைரக்சனில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் வேலைக்காரன் படத்திற்கான டீசர் வெளியானது. இதனை அறிவிக்கும் வகையில் முன்னணி நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம் ‘வேலைக்காரன்’ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது.
இது தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகளை மீறிய செயல் என்பதால் நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை சுமார் ஒரு கோடி என்கிறார்கள்.