சிவகார்த்திகேயனுக்கு என ஸ்ட்ராங்கான மார்க்கெட் வேல்யூ உருவாகிவிட்டது. அது அவரது படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் விஷயத்திலும் செனல்களுக்குள் போட்டியை உருவாக்கி விட்டது.. சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை விஜய் டிவி நிறுவனம் 16 கோடி கொடுத்து வாங்கியது..
16 கோடியா என ஆச்சர்யப்பட வேண்டாம். இதுவே குறைவுதான்.. இளைஎன்றால் இதைவிட இன்னும் கொஞ்சம் அதிக விலைக்கு விற்க சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டிருக்கலாம். அதனால் தான் இந்தமுறை பொன்ராம் இயக்கத்தில் தான் மூன்றாவது முறையாக நடிக்கும் புதிய படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றி விட்டுவிட்டார் இவகார்த்திகேயன்..
அப்போ அவரது தாய் வீடான விஜய் டிவி அவ்ளோ தானா..? அப்படியெல்லாம் இல்லை விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள எப்போது அழைத்தாலும் வரத்தயார் என இப்போதும் அதே பாசத்துடன் இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் வியாபாரம் வேறு வளர்த்த பாசம் வேறு.. என்பதில் உறுதியாகவும் இருக்கிறாராம்.