ஹீரோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படம் ஒன்றில் நடித்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.
24 ஏ.எம். ஸ்டுடியோ சார்பில் ஆர் டி ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இதுவரை பெயரிடப்படாத லிருந்த இப்படத்திற்கு தலைப்பை வெளியிட்டுள்ளனர்.
படத்திற்கான தலைப்பை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனுடன் மோஷன் போஸ்டர் ஒன்றையும் ஏ ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.