அஜித்தை கலாய்த்துவிட்டு நடுங்கிய சூரி…!


இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திரையுலக வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நகைச்சுவை நடிகர் சூரி. சில வருடங்களுக்கு முன் லிங்குசாமி டைரக்சனில் ‘ஜி’ படத்தில் அஜித்துடன் நடித்த காட்சிகளை குறிப்பிட்ட அவர், அந்தப்படத்தில் நடந்த நிகழ்வு ஒன்றையும் கூறினார்.

அந்தப்படத்தில் அஜித்தின் எதிரணி ஆளாக இருப்பார் சூரி.. கல்லூரி தேர்தல் முடிந்ததும், அஜித்தை கலாய்க்கும் விதமாக வசனம் பேசவேண்டும் என சூரியிடம் லிங்குசாமி கூறினாராம். ஆர்வக்கோளாறில் தானாகவே சொந்தமாக ஒரு வசனம் பேசி அஜித்தை கலாய்த்தாராம் சூரி..

அந்த காட்சி முடிந்ததும் சூரியை அழைத்த லிங்குசாமி நீ என்ன டயலாக் பேசிருக்க தெரியுமா..பாரு” என சொன்னதும் வெலவெலத்து போனாராம் சூரி.. விட்டால் ஓடிவிடலாம் என்கிற மனநிலையில் பயந்துகொண்டிருந்த அவரை ‘சூப்பரா யதார்த்தமா பெசிருக்கே” என லிங்குசாமியும் அஜித்தும் பாராட்டியதும் தான் சூரிக்கு உயிரே வந்ததாம்.